நமது சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 22 லட்சத்துக்கான காசோலையை நேரில் அளிக்கப்பட்டது

இன்று 29 .5 .21 அன்று மாலை 4 மணிக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை திருச்சியில் சந்தித்து நமது நகராட்சி பொறியியல் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 22 லட்சத்துக்கான காசோலையை நேரில் அளிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலாளரும் நகராட்சி நிர்வாக ஆணையரக கண்காணிப்புப் பொறியாளருமான திரு எஸ். திருமாவளவன் அவர்களும் தலைவர் திரு ந. கமலநாதன் மண்டல செயற்பொறியாளர் சேலம் அவர்களும் பொருளாளர் திரு இளங்கோவன் உதவி செயற்பொறியாளர், செங்கல்பட்டு மண்டல செயற்பொறியாளரும் சங்கத்தின் துணை செயலாளருமான திரு மு. கருப்பையா ராஜா அவர்களும், பேரூராட்சிகளின் கண்காணிப்புப் பொறியாளர் திரு.டி. அன்பழகன் அவர்களும் பேரூராட்சிகளின் பொறியாளர்கள் திரு. விஜய் கார்த்தி செயற்பொறியாளர்K.R S. கருப்பையா, விஸ்வநாதன் மற்றும் ராஜா மற்றும் இதர சங்கபிரதிநிதிகள் உடன் இருந்தனர்.