நகர் நிர்வாக அலுவலக கட்டட திறப்பு விழா அழைப்பிதழ்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை (8.1.2019) தலைமை செயலகத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி அவர்கள் சந்தித்து, சென்னையில் 10.1. 2019 அன்று நடைபெறவுள்ள நகர் நிருவாக அலுவலகக் கட்டட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.உடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் திரு ஜி.பிரகாஷ்.,இ.ஆ.ப.,பேரூராட்சிகளின் இயக்குநர் திரு.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.