குப்பை சேகரிக்க வாகனங்கள்

திருமங்கலம் நகராட்சியில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்க 21.60 லட்சம் ரூபாய் செலவில், பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்களை நேற்று அமைச்சர் உதயகுமார் துப்புரவு தொழிலாளிகளுக்கு வழங்கினார். கமிஷனர் ஜெயராம ராஜா, பொறியாளர் சக்தி வேல், சுகாதார அலுவலர் சீனிவாசன், ஓவர்சியர் பட்டுராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.